வேலைக்கான நேர்காணலில்
சொல்ல முடியாத பதில்கள்...(மனசுக்குள் மட்டும் சொல்லிப்பார்த்தது!?)
கேள்வி: உங்க தனி திறமை என்ன?
பதில்: எத்தனை பெண்கள் கூட்டமாய் வந்தாலும் ஒவ்வொருத்தரின் அங்க அடையாளங்களையும் புட்டு, புட்டு வைப்பேன்!
-------------------------------------
கேள்வி: எங்க நிறுவனத்துல வேலை பார்க்கனும்ன்னு ஏன் ஆசை படறிங்க?
பதில்: வேற யாரும் எமாறலே. அதோட இங்க தான் நிறைய ஃபிகருங்க வேலை பாக்கறாங்கலாம்!
--------------------------------------
கேள்வி: சம்பளம் எவ்வளவு எதிர் பாக்கறிங்க?
பதில்: டீ செலவுக்கு கொடுத்தாலே போதும். ஆனா, 'முப்பதாயிரம்'ன்னு பந்தா பண்ணுவேன்!
--------------------------------------
கேள்வி: இதுக்கு முன்னாடி வேலைப் பார்த்த இடத்துல உங்க சாதனை என்ன?
பதில்: தண்ணி போட்டுட்டு அதிகாரிகளை ஓட, ஓட விரட்டி அடிச்சது!
-----------------------------------------
கேள்வி: இதற்கு முன் பார்த்த வேலையை ஏன் விட்டிங்க?
பதில்: 'வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாச்சும் வேலை பாருங்க'ன்னு சொன்னாங்க!
----------------------------------------
கேள்வி: இங்க நீங்க எதிர் பார்க்கிற வசதி என்ன?
பதில்: ஹீ... ஹீ... சூப்பர் குட்டி எனக்கு 'பி.ஏ'.வா வேணும்!
---------------------------------------
கேள்வி: குண்டு பல்பினுள் உள்ள இழை எதனால் ஆனது?
பதில்: ஹும். டீயூப் லைட் கேக்கற கேள்வியைப் பார்!
--------------------------------------
கேள்வி: தமிழ் தாத்தா என்ற சிறப்பிற்கு உரியவர் யார்?
பதில்: எங்க தாத்தாவைப் பத்தியே எனக்கு தெரியாது!
---------------------------------------
கேள்வி: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் என்ன?
பதில்: தமன்னா பிறந்த நாள் தான் தெரியும்!
------------------------------------------
கேள்வி: கார் ஓட்டுவிங்களா?
பதில்: ஹீ... ஹீ... ஃபிகருங்களை தான் ஓட்டுவேன்!
-------------------------------------------
கேள்வி: சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவிங்களா?
பதில்: முதல் நாள் நைட் மப்பு ஓவரா ஆகாம இருந்தா!
----------------------------------------
கேள்வி: அடிக்கடி லீவு எடுப்பிங்களா?
பதில்: வாரத்துக்கு நாலு நாட்கள் மட்டும்!
-----------------------------------
கேள்வி: உங்களுக்கு வேலை இல்லேன்னு சொன்னால்?
பதில்: வெளிய வருவிங்க இல்ல?!
---------------------------------
கேள்வி: உங்க பலவீனம் என்ன?
பதில்: உங்கப் பொண்ணு!
-------------------------------------
கேள்வி: படிக்கும் போது எந்த விளையாட்டுல ஆர்வம் அதிகம்?
பதில்: மூணு சீட்டு விளையாடறதுல!
-----------------------------------
கேள்வி: உங்க லட்சியம்?
பதில்: உங்களை இதே மாதிரி நிக்க வைச்சு நான் கேள்விக் கேக்கணும்!
-------------------------------------
